என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மனுஷ்ய புத்திரன்
நீங்கள் தேடியது "மனுஷ்ய புத்திரன்"
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. பேச்சாளரும், எழுத்தாளருமான மனுஷ்ய புத்திரன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
கடந்த 18-ந்தேதி ‘ஊழியின் நடனம்’ என்ற தலைப்பில் இயற்கை சீற்றம் மழை வெள்ளம் பற்றி பொதுவாக ஒரு பெண்ணை வர்ணித்து கவிதை எழுதி, சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா எனது கவிதையை இந்து கடவுளுக்கு எதிராக களங்கம் கற்பிக்கும் கவிதை என்று தனது டுவிட்டர், பேஸ்புக்கில் எனது பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக குறிப்பிட்டுள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டு போலீஸ் நிலையங்களில் என் மீது வழக்குப் பதிவு செய்ய அனைவரையும் தூண்டும் விதத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் சமூக விரோதிகள் எனது செல்போன் எண்ணை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதன்மூலம் என்னை பலர் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். வாட்ஸ்-அப் எண்ணுக்கு குறுஞ்செய்திகளும் வருகிறது.
இதுபோன்ற மிரட்டல்களால் எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
எச்.ராஜா எனக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்ய தூண்டி வருகிறார். எனவே அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

×

X